நீலகிரி மாவட்டம். குன்னூர்!!!!!!
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு 4 லட்சத்து 50 ஆயிரம் விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசனை முன்னிட்டு சிம்ஸ் பூங்காவில் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி துவக்கி வைத்தார்.
இதில் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வகையான 50 மலர் நாற்றுகளும், 125-க்கும் மேற்பட்ட மலர் விதைகளும் தற்போது நடவும் செய்யும் பணிகளை துவங்கியது. இதில் குறிப்பாக சால்வியா, டேலியா,மேரி கோல்ட், லில்லியம் ,பெகோனியா,டேலியா,உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை இணை இயக்குநர் ஷிபிலா மேரி,உதவி இயக்குநர் விஜய லட்சுமி, மேலாளர் லட்சுமணன், மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள், பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர்.
தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி கூறுகையில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.இந்தாண்டு அதை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings