நீலகிரி மாவட்டம் #
குன்னூர் அதிகரட்டி நூலகருக்கு நல் நூலகர் விருது
ஊருக்கொரு நூலகம் அமைப்போம் என்ற அண்ணாவின் கொள்கைக்கேற்ப தமிழக அரசு நூலக ஆணைக் குழு மூலம் கல்வி மேம்பாட்டுக்காக நூலக பணிக்காக அதிகமான நிதியை செலவிட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நன்றாக செயல்படும் நூலகங்களுக்கு நூலகத்தை ஏற்படுத்திய நூலகத் தந்தை எனப் போற்றக்கூடிய ரெங்க நாதன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நல் நூலகர் விருதும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் அதிகரட்டி கிளை நூலகத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு நல் நூலகர் விருது வழங்கப்பட்டுள்ளது
இவ்விருதிணை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் சென்னையில் வழங்கினார். நல் நூலகர் விருது பெற்ற ராஜசேகர் அவர்களை மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings