in

புனித செபஸ்தியாரின் 148-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம்                                          குன்னூர்:

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கண்டோன்மெண்ட்க்குட்பட்ட, செபஸ்தியார் புரத்தில் புனித செபஸ்தியாரின் 148-ஆம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள செபஸ்டியார் புரத்தில் வருடந்தோறும் ஜனவரி 13-ம் தேதி, கொடியேற்றப்பட்டு ஏழு நாட்கள் நவநாள் ஜெபம் நடத்தப்பட்டு  20-ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல் இந்த வருடமும் 13.01.2026 அன்று விழா துவங்கியது 

இந்த விழாவானது 7 (20.01.2026) நாட்கள்       நவநாளுடன்  மதியம் அன்னதானத்துடன் கொண்டாடப்பட்டது .ஏராளமான பொதுமக்கள் பல கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு அன்னதானம் உண்டு செபஸ்தியாரின் ஆசீரை பெற்று சென்றனர்.

மாலை செபஸ்தியாரின்  தேர் பவனி புனித சூசையப்பர் பங்கு ஆலயத்திலிருந்து புறப்பட்டு பாய்ஸ் கம்பெனி,வழியாக  செபஸ்தியார்புரம் வந்தடைந்தது. இந்த விழாவிற்கான உரிய அனைத்து ஏற்பாடுகளையும் பஜனை கமிட்டி சார்பாகவும்,ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பாக செய்து இருந்தனர் 

குறிப்பாக – ரோம் நாட்டிலிருந்து புனித செபஸ்தியார் மற்றும் புனித அந்தோணியார் அவர்களின் பண்டங்கள் கொண்டு வரப்பட்டு அதனை பிரதிஷ்டை செய்து மக்களுடைய பார்வைக்காக வைக்கப்பட்டு அந்த பண்டங்களை அனைத்து மக்களும் ஜெபித்து வழிப்பட்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திமுக சார்பில் எடப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் இறுதி போட்டி.

கேத்தி சி.எஸ்.ஐ.கல்லூரியில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.