in

வருகிற 16ம் தேதி அசோக்நகர் அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்

சென்னை

சென்னை அசோக் நகர் 3வது அவென்யூவில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தற்போது இந்த அம்மனுக்கு கோயில் அறங்காவலர் வி.கே.சாமி கருணாகரன் பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் பங்களிப்புடன் கோயில் எழுப்பியுள்ளார்.

இந்த ஆலயத்தில் வருகிற 16ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விருச்சிக லக்கணத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

விழாவை முன்னிட்டு வருகிற 8ம் தேதி காலை 4.45 மணிக்கு பந்தக்கால் நடுதல், 15ம்  தேதிகாலை 8 மணிக்கு கரிகோலம் காட்டுதல், 9 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 10 மணிக்கு புதிய விக்ரகம் கண் திறத்தல், மதியம் 1 மணிக்கு ஏ.டி.சேகர் ஏற்பாட்டில் அன்னதானமும், மாலை 4.15 மணியளவில் மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை, அம்பாள் எந்திர ஸ்தாபனம் அம்மன் சிலை பிரதிஷ்டையும், இரவு 8.30 மணிக்கு பூர்ணாவதி தீபாராதனை நடக்கிறது.

16ம் தேதி காலை 6.30 மணியளவில் விநாகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், திரன்யாவதி, பூர்ணாவதி நடக்கிறது. 8.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. இரவு  9 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடக்கிறது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுனரும், பாஜக மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக திநகர் கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.கருணாநிதி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சியின் 135வது வார்டு கவுன்சிலருமான  சாந்தி என்கிற யாழினி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பாஜக தென் சென்னை மாவட்ட தலைவர் வே.காளிதாஸ், தென்சென்னை மராவட்ட பொதுச் செயலாளர் டி.அரவிந்ராஜ், தென்சென்னை மாவட்டட செயலாளர் டி.உமாசங்கர், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.நாகராஜன், மாநில செயலாளர் கலை மற்றும் கலாசார பிரிவு ஆர்.வி.சத்தியநாராயணன் மற்றும் ஆன்மீகவாதிகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சேகர், அனைத்து இந்திய மக்கள் உரிமை அமைப்பு நிறுவனர் எஸ்.ரவிச்சந்திரன், அண்ணாமலையார் நிதிநிர்வாகி டாக்டர் ஸ்ரீதர், ஓம் ஸ்ரீகாந்திமதி அம்மா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் ஆலய கமிட்டி நிர்வாகிகள் தலைவர் எஸ்.பி.சுப்புகணேஷ், செயலாளர் எஸ்.அசோக்குமார், பொருளாளர் வி.விஸ்வநாதன், துணைத் தலைவர்கள்  ராமு, எம்.கணபதி, சைதை முருகன், துணை செயலாளர்கள் எஸ்.பத்மநாபன், எம்.சசிகுமார், ஈ.பி.மோகன், இணைச் செயலாளர்கள் எஸ்.மஞ்சு, ஆர்.யாஷிகா, எம்.லதா, ஜிவி. கோதாவரி, சுபேதா கிரிராஜன், கவுரவ தலைவர்கள் எஸ்.வினோத், எம்.தினேஷ் பிரஜாபதி, ஜெ.எல்.மனோஜ், ஆர்.பார்த்திபன் மற்றும் விழாக்குழுவினர் எஸ்.ஏழுமலை, ஜெ.ராமு, கே.மணிவாசகம், அன்பரசன், கே.மதுமிதா, சாந்தி, இ.வெற்றி, பி.ஐஸ்வர்யா, டி.திவ்யா, எம்.மணிமொழி, எம்.மலர்விழி, ஜோயோ, குன்றத்தூர் ’ஜயா, மேகலா, முத்துக்குமார், கே.ஜீவானந்தம், டி.கலையரசி, புகழரசி, டி.கனகசெல்வி, தமிழ், ரூபினி, தீபா அன்புவாசன், எம்.ஜோதி, எம்.சத்தியா, தேவி, சௌமியா, திவ்யா, எம்.ரூபினி, எஸ்.செல்வி, சூர்யா, பாம்பு முருகன், கொக்குப்பேட்டை மாயா, ஸ்ரீஹரி, அமோதா, லோரா, சஞ்சனாஸ்ரீ, மாதவி, கிருஷ்ணா, மணி, சிவா, லோகேஷ், அஜய், கில்டன், கடம்பாக்கம் கணேஷ், ராகுல், கே.சார்லஸ் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு