நீலகிரி மாவட்டம். குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கரிமராஹட்டி குடியிருப்பு பகுதியில் புகுந்த கருஞ்சிறுத்தையால்,அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உணவு தண்ணீர் தேடி யானை, சிறுத்தை, கரடி,புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே கரிமரா ஹட்டி குடியிருப்பு பகுதியில் உலாவிய கருஞ்சிறுத்தை அப்பகுதியில் சுற்றி வந்தது, சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய சிறுத்தை பின்னர் அருகில் இருந்த வனப் பகுதிக்குள் நுழைந்தது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கருஞ் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings