# நீலகிரி மாவட்டம்,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் நடைபெற்றது…..
குன்னூரில் மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் பேசுகையில் பொதுமக்கள் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள அனைவரும் அவரவர் வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என்றும் அல்லது இரண்டு வீடுகள் ஒன்று சேர்ந்து பொருத்தலாம் என்றும் மேலும் மாவட்டத்தில் வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா அதிக அளவில் புழங்குவதாகவும் அதனை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறைக்கு பொதுமக்கள் ஆகிய நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மேலும் பெண்களுக்கான பாதுகாப்பு கருத்தில் கொண்டு காவலர் உதவி ஆப் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அதனை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் ஆபத்து காலங்களில் காவலர் உதவி ஆப்பை பயன்படுத்தி பிரச்சனைகளில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகம் நடைபெறுவதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பேசினார்.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்பி சௌந்தர்ராஜன் மற்றும் குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் காவல் துறையினர் மற்றும் குன்னூர் நகராட்சி தலைவர் சுசிலா, நகரமன்ற உறுப்பினர் ராமசாமி,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings