in

வெலிங்டனில் தென்னிந்திய இராணுவ வீரர்களுக்கான ஓட்டப்பந்தயம்

  1. நீலகிரி மாவட்டம் குன்னூர் 13.12.2025
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் சார்பில்  ராணுவ வீரர்களுக்கான தேசிய அளவிலான 10 கிலேமீட்டர்  ஓட்டப் பந்தயம்  குன்னூர் தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மாரத்தான் பாேட்டியில் தெற்கு பிராந்தியத்தை சேர்ந்த  48  ராணுவ வீரர்கள் 10கிலோ மீட்டருக்கான ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டனர்.

 இந்த போட்டியானது 8 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வோர் அணியிலும் தலா 6 வீரர்கள் இடம்பெற்றனர். போட்டியை ராணுவ மையத்தின்  கர்னல் குட்டப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தப் போட்டியில்  செகண்ட்  மெட்ராஸ் ராணுவ மையத்தை  சேர்ந்த வீரர் ஜிதேந்தர் குமார்  32.04 நிமிடங்களில் முதல் இடத்தை பிடித்தார்,

இரண்டாம் இடத்தை கெடுவால் ரைபிள் ரெஜிமெண்ட்டை சேர்ந்த பிரமோத் சிங் சுமார் 32.10  நிமிடங்களிலும், மூன்றாவது இடத்தை  15 கார்ட்ஸ்    ரெஜிமெண்ட்டை சேர்ந்த கவுர் மாத்தூர் 32.14 நிமிடங்களில்  பந்தய தூரத்தை  கடந்து வெற்றி  பெற்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை

 ரேபிட் ரெஜிமெண்ட் அணி வீரர்கள் தட்டி சென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு கர்னல் நித்தின் குட்டப்பா மற்றும் சுபேதார் மேஜர் ராஜு உத்தர் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜெகதளா பேரூராட்சியில் என்வாக்கு சாவடி வெற்றி வாக்குசாவடி கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் பொதுமக்கள் அவதி