நீலகிரி:
நீலகிரி மாவட்டம் எல்லநள்ளி பகுதியில் இருந்து பழைய அருவங்காடு செல்லும் சாலையில் ஆங்காங்கே இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போக இடம் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையில் ஒரு சிலர் வாகனங்களை நிறுத்திக் கொண்டு கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகின்றது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல், 2 கழிவுநீர் வடிகால் குழாயினால் எல்லநள்ளி பகுதியில் இருந்து வரும் அனைத்து கழிவுநீரும் அந்த கால்வாய் வழியாக தான் செல்கிறது.
தற்போது அந்த கால்வாய் பகுதியும் அடைபட்டு இருப்பதால் அவ்வழியே செல்லும் கழிவுநீர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம், சாலையில் ஓடி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படி செய்யவில்லை என்றால் மிக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings