in

இருடியம் என கூறி கலசங்களை காண்பித்து மோசடி: கும்பல் கைது- தலைவனுக்கு வலை

கோவை:

கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 44). இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி ரூ.11 கோடி ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து சிராஜூதீன் குனியமுத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெரோஸ்கான், முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தருவதாகவும், பின்னர் மீதி தொகையை தருவதாகவும், எனவே வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் சிராஜூதீன் வழக்கை வாபஸ் வாங்க மறுத்துவிட்டார்.

இதனால் சிராஜூதீனை மிரட்ட பெரோஸ்கான் முடிவெடுத்தார். இதற்காக திருநெல்வேலி பழைய செட்டிகுளத்தை சேர்ந்த ராஜ் (எ) ராஜ நாராயணன் (48), நாங்குநேரியை சேர்ந்த ஞான பாலாஜி (35), தூத்துக்குடியை சேர்ந்த பொன் முருகானந்தம் (56) ஆகியோரை பெரோஸ்கான் அனுகினார். இதற்காக ரூ.50 லட்சம் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கூலிப்படையை சேர்ந்தவர்கள் கோவையில் உள்ள பெரோஸ்கான் வீட்டிற்கு சென்று முதல் கட்டமாக ரூ.20 லட்சத்தை பெற்றுக்கொண்டு காரில் சென்னை நோக்கி புறப்பட முயன்றனர். இவர்கள் திட்டம் பற்றி ரகசிய தகவல் கிடைத்த கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது பணத்துடன் சென்னைக்கு செல்ல முயன்ற செட்டிகுளம் ராஜ், பொன் முருகானந்தம், ஞான பாலாஜி ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், செட்டிகுளம் ராஜ் பிரபல ரவுடி. இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. சில முக்கிய தொழிலதிபர்களிடமும் மோசடி செய்துள்ளார்.

பெரோஸ்கான் இரிடியம் இருப்பதாக சிராஜூதீன் உள்பட சிலரிடம் கூறியுள்ளார். இரிடியத்தை எடுத்தால் மின் அதிர்வு ஏற்படும் என்று, அதற்காக விசேஷ ஆடை அணிந்த குழுவை வைத்து நாடகமாடியதும் தெரிய வந்தது.

மேலும் இரிடியம் கோயில் கோபுர கலசங்களில் இருக்கும். இதை எடுத்து வைத்தருக்கிறோம். இதை வீட்டில் வைத்திருந்தால் அனைத்து வகை செல்வங்களும் குவியும் என்று கூறி கலசங்களை காண்பித்து ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஏமாற்றத்தில் ஈடுபட்ட பெரோஸ்கானை போலீசார் தேடி வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சாகச வீடியோவிற்காக ரயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பலி

எல்லநள்ளி பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதால் பொது மக்கள் அவதி