கூட்டுறவு சங்கங்களின் தலைவராக அழைக்கப்படும் பெடரிக் நிக்கல்சன் 88வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு குன்னூரில் உள்ள கல்லறையில் மலர் வளையம் வைத்து செலுத்தப்பட்டது.
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. நமது நாட்டில் 1892 ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த சர் பெடரிக் நிக்கல்சன் இந்த கூட்டுறவு சங்கங்களை அறிமுகம் செய்து துவக்கி வைத்தார். தற்போது செயல்பட்டு வரும் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் இவர் தந்தையாக அழைக்கப்படுகிறார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே தங்கி குறிப்பாக குன்னூரில் தங்கி பல்வேறு சேவைகளை செய்து வந்தார். கடந்த 1936ம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி மரணமடைந்தார். இவரின் உடல் குன்னூர் சானிடோரியம் பகுதியில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 88வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதனை ஒட்டி குன்னூர் நிக்கல்சன் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் தலைமை வகித்து மலர் வளையம் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கூட்டுறவு சங்கத்தினர்கள் மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.
இந்த ஆண்டு அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் நிக்கல்சன் உருவ படத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிக்கல்சன் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் மேலாளர் அந்தோணிசாமி தெரிவித்தார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings