in

CuteCute OMGOMG CryCry LOLLOL LoveLove

கட்டபெட்டு சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வேட்டையாடிய 6 பேர் கைது

  • நீலகிரி மாவட்டம்
    குன்னூர்

    கடமான் வேட்டையாடிய 6 பேர் கைது
    நீலகிரி வனக் கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம், பிக்கப்பதி பிரிவிற்குட்பட்ட கனாக்கம்பை வனப்பகுதியில்  (23.08.2026) அன்று நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி கடமானை வேட்டையாடிய 6 நபர்களை  (24.08.2026) அன்று காலை சுமார் 10.00 மணியளவில் வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
    கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:
     1. வேலு (36), த/பெ. பாலதுரை, திம்மாம்பாளையம் புதூர், காரமடை.
     2. சூரியா (32), த/பெ. ராஜா, திம்மாம்பாளையம் புதூர், காரமடை.
     3. மாணிக்கம் (36), த/பெ. மாதவன், திம்மாம்பாளையம் புதூர், காரமடை.
     4.செந்தில்குமார் (45), த/பெ. ரங்கன், கனாக்கம்பை, உதகை.
     5. விஸ்வநாதன் (38), த/பெ. வீரன், கனாக்கம்பை, உதகை.
     6. சின்னதுரை (43), த/பெ. ராஜூ, கனாக்கம்பை, உதகை.
    கட்டபெட்டு வனச்சரக அலுவலர் திரு. ஜெயக்குமார் தலைமையிலான வனத்துறையினர் இவர்களைக் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், இவர்களிடமிருந்து,ஒரு(1 )நாட்டுத் துப்பாக்கி,மான் தோல் மற்றும் கத்தி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
    வனத்துறையின் சட்ட எச்சரிக்கை:
    கடமான் (Sambar Deer) என்பது ‘வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, பட்டியல் 1’-ன் (Schedule I) கீழ் வகைப்படுத்தப்பட்ட, மிக உயரிய பாதுகாப்பு அந்தஸ்து கொண்ட விலங்காகும். இவற்றை வேட்டையாடுவது பிணையில் வெளிவர முடியாத (Non-bailable), கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.மற்றும், வனத்துறையினர்
    பொதுமக்களுக்கான வேண்டுகோள் விடுத்துள்ளனர்
    வன விலங்குகளை வேட்டையாடுவதோ,அல்லது அவற்றின் இறைச்சியை வாங்குவதோ சட்டப்படி பெருங்குற்றமாகும்.எனவே, பொதுமக்கள் யாரும் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது என வனத்துறை சார்பில் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது, மட்டுமன்றி
    வனப்பகுதிகளில் யாராவது வன விலங்குகளை வேட்டையாட முயன்றாலோ அல்லது காட்டு விலங்குகளின் இறைச்சியை விற்க முற்பட்டாலோ, பொதுமக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்குத்,தகவல் தெரிவிக்க வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குடியிருப்பில் உலா வந்த கருஞ்சிறுத்தை வீடியோ பொதுமக்கள் அச்சம்

கண்டோன்மெண்ட் பாளைய வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா