in

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர் நாற்று நடும் பணி துவக்கம்.

நீலகிரி மாவட்டம்.                                                குன்னூர்!!!!!!

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு  4 லட்சத்து 50 ஆயிரம்  விதைகள் மற்றும் நாற்றுகள் நடவும் பணி துவங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசனை முன்னிட்டு சிம்ஸ் பூங்காவில் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி துவக்கி வைத்தார்.

இதில் சிம்ஸ் பூங்காவில் பல்வேறு வகையான 50  மலர் நாற்றுகளும்,          125-க்கும் மேற்பட்ட மலர் விதைகளும் தற்போது நடவும் செய்யும் பணிகளை துவங்கியது.  இதில் குறிப்பாக சால்வியா, டேலியா,மேரி கோல்ட், லில்லியம் ,பெகோனியா,டேலியா,உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகளை இணை இயக்குநர் ஷிபிலா மேரி,உதவி இயக்குநர் விஜய லட்சுமி, மேலாளர் லட்சுமணன், மற்றும் தோட்டக்கலை பணியாளர்கள், பூங்கா ஊழியர்கள் நடவு செய்தனர்.

தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி கூறுகையில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர்.இந்தாண்டு அதை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கங்களின் (பிட்மா) தேசிய மாநாடு

கட்டபெட்டு தொழில் பயிற்சி பள்ளியில் இலவசமடிக்கணினி வழங்கப்பட்டது