in

குன்னூர் பகுதியில் உலா வரும் கரடியின் சிசிடிவி காட்சிகள்

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி மாவட்டம்.                                             குன்னூர்!!!!!!

உபாசி வளாகத்தில் கரடி அட்டகாசம் பொது மக்கள் அச்சம்

உபாசி வளாகத்தில் கரடி ஒன்று வெகு நேரம் சுற்றி திரிந்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி குடியிருப்பு வாசிகளை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குன்னூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள உபாசி வளாகத்தில்,40 அலுவலர்கள், ஊழியர்கள் குடியிருந்து வருகிறார்கள். மேலும் உபாசி வளாகத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். பொதுமக்கள் காலை மற்றும்  மாலை வேளைகளில் நடை பயிற்சி செய்ய உபாசி வளாகத்தை ஒட்டியுள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.ஏராளமான பள்ளி  செல்லும் குழந்தைகள் இங்கு உள்ளனர்.

இந்நிலையில்  உபாசி வளாகத்தில்  வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.இந்த நிலையில் கரடி ஒன்று உபாசி வளாகத்தில்  அங்குல உள்ள அலுவலர்களின் குடியிருப்பு கதவுகளை உடைத்து பொருட்களை நாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. காட்டெருமை மற்றும் முள்ளம்பன்றி ஆகியவை அதிகளவில் இந்தப்பகுதியில் சுற்றி திரிகின்றன.இந்நிலையில் உபாசி வளாகத்தில் கரடி சுற்றி திரிவது, பொதுமக்களிடையே,மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறை துரித நடவடிக்கை எடுத்து  அசம்பாவிதங்கள் ஏதாவது நிகழும் முன்,கரடி பிடிக்க பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் ஊராட்சி ஒன்றியம் வளங்கள் மீட்பு மையம்-உபதலை

குன்னூர் வியாபாரிகள் நல சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு