- நீலகிரி மாவட்டம் 13.12.2025
- நீலகிரி மாவட்டத்தில் பருவமழை தாமதம் மற்றும் புயல் தாக்கத்தின் காரணமாகத் தள்ளிப்போன பனிக்காலம், தற்போது தொடங்கியுள்ளது. உதகை மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டின் முதல் பனிப் பொழிவு தொடங்கியது. கடும் குளிரால் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக நவம்பரில் பனிக்காலம் தொடங்கும் நீலகிரியில், வடகிழக்குப் பருவமழையும் புயலின் தாக்கமும் காரணமாகப் பனிப்பொழிவு சுமார் ஒரு மாதம் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது.
தலைக்குந்தா, குன்னூர் ஜிம்கானா மைதானம்,தங்கராஜ் ஸ்டேடியம் போன்ற நீர் நிலைகள் அருகில் உள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் வெண்மையான பனி படர்ந்து காணப்படுகிறது,
இரவு முதல் அதிகாலை வரை பனியின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குளிரின் தாக்கம் அதிகரித்திருப்பதால் வெம்மை ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டிக் குளிர் காய்கின்றனர். இதன் காரணமாக காலை நேரத்தில் காய்கறி உள்ளிட்ட தோட்ட வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings