in

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் தேமுதிக கூட்டம்

  • நீலகிரி மாவட்டம் 

நீலகிரி மாவட்டம் குன்னூரில்  பிரச்சாரம் மேற்கொள்ள தேமுதிக பொது செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் இன்று குன்னூர் வந்தார்.முன்னதாக கோடமலை பகுதியில் உள்ள மாவட்ட செயலாளரின் இல்லத்திற்கு சென்றார் இதனை தொடர்ந்து, படுகர் இன மக்களின் கலாச்சார நடனம் ஆடி  உற்சாகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து  நடிகர் விஜயின் த.வெ.க  கட்சி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் கூற மறுத்துவிட்டார் பிறகு தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்,வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து வரும் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி மதுரையில் நடைபெற உள்ள 2.O மாநாட்டில் முடிவு செய்யப்படும் எனவும்,இந்தத் தேர்தல் மட்டுமல்லாமல் அடுத்த ஆறு மாதத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக போட்டியிடும் என கூறினார் 

பிறகு எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்கு திருட்டு நடந்து வருவதாக புகார் அளித்துள்ளது. அந்த அந்த மாநிலங்கள் சேர்ந்த மக்களுக்கு அங்கேயே வாக்குரிமை அளிக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது.முக்கிய காரணம் டாஸ்மார்க் மற்றும் போதை பொருட்கள் விற்பனைகளால் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என கூறினார் அதன் பிறகு அப்பகுதியை சேர்ந்த தேயிலை விவசாயிகளிடம் கலந்துரையாடல் மேற்கொண்டும் அவர்கள் நலன் குறித்தும் கேட்டறிந்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஜய் தலைமையில் த.வெ.க. கூட்டணி

குன்னூர் அதிகரட்டி நூலகருக்கு நல் நூலகர் விருது.