நீலகிரி
நீலகிரி மலை ரயில் பாதுகாப்பு குறித்து ஹெரிடேஜ் ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் வாசிம் மெம்மோத்ரா ,இணை இயக்குநர் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் மண்சரிவு, மற்றும் பாறைகள் விழுந்ததால் மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சிறப்பு மலை ரயில் மூலம் ஹெரிடேஜ் ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் வாசிம் மெம்மோத்ரா ,இணை இயக்குநர் ராஜ்குமார் உட்பட அதிகாரிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்தடைந்தனர்.
மேலும் மலைரயில் பாதையில் ஆங்காங்கே குறிப்பாக ஹிங்குரோவ், மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி நூற்றாண்டு பழமை வாய்ந்த. மலை இரயிலை எவ்வாறு பாதுகாப்பது எவ்வாறு மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் மலை இரயில் பணிமனையையும் பார்வையிட்டு சென்றனர்.
உள்ளாட்சி முரசு நாளிதழ்.
நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.
A.ஜான்டிசோசா(டானியல்).
8870917777
…..
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings