பொழிச்சலூர், ஆக.16
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்துள்ள புனித தோமையர் மலை ஒன்றிய பொழிச்சலூர் ஊராட்சியில் 78வது சுதந்திர தினவிழா ஊராட்சி மன்ற தலைவர் பா.வனஜா தயாளன் தலைமையில் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஊராட்சி மன்ற தலைவர பா.வனஜா தயாளன் தலைமை ஏற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.தொடர்ந்து அனைவரும் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி.ஜோசப், ஊராட்சி செயலர் சங்கர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடினர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings