in

நள்ளிரவில் குடியிருப்புக்குள் உணவை வேட்டையாடும் கரடியால்பரபரப்பு

நீலகிரி மாவட்டம் #.                                                   

குன்னூர் அருகே  நள்ளிரவில் குடியிருப்புகள் புகுந்து  உணவை சாப்பிட்டு சென்ற கரடியால் பரபரப்பு !!!

 குன்னூர் பகுதியில்  கரடிகள் நடமாட்டம்  அதிகரித்து வருகிறது.                                                                   கிராமப்புற பகுதிகள் மட்டுமல்லாமல்  தற்போது நகர பகுதிகளிலும் கரடிகள் உலா வருவதால்  மக்கள்  அச்சத்தில் உள்ளனர்.                                                

இதனை கூண்டு வைத்து பிடிக்க  வனத்துறையினர்  பல முயற்சிகள் மேற்கொண்டாலும்,அதில் தப்பித்து  மீண்டும் குடியிருப்பு பகுதிகளில்  சுற்றி வருகிறது . 

இந்நிலையில்  குன்னூர் அருகே உள்ள  ஆர்செடின்  பகுதியில்  சுற்றித்திரிந்த ஒற்றைக் கரடி   இன்று அதிகாலை  நான்கு மணி அளவில்  சின்னப்பன் என்பவர் வீட்டின்  கதவுகளை உடைத்து  உள்ளே சென்ற கரடி  சமையலறையில் வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை  ருசி பார்த்ததுடன்  அங்குள்ள பொருட்களையும் சூறையாடியது.                          

அசந்து தூங்கி கொண்டிருந்த  சின்னப்பன்  சத்தம் கேட்டு  சமையலறையை  பார்த்தபோது  கரடி இருந்ததை பார்த்து  அலறி அடித்து வெளியே ஓடினார் . அக்கம்பக்கம் உள்ளவர்களும்  விரைந்து வந்து  தீப்பந்தங்கள் மூலம்  கரடியை அருகில்  தேயிலை தோட்ட  பகுதிக்கு  விரட்டியடித்தனர்.      

இது குறித்து தகவல் அறிந்தவுடன் குன்னூர் வனத்துறையினர்  விரைந்து சென்று  சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் கரடியின் நடமாட்டம்  குறித்து  தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இச்சம்பவம்  தொழிலாளர்களிடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பல மாதங்களாக சீரமைக்கப்படாத கால்வாய் குழாய் உடைப்பு… ஆம்புலன் உள்ளே செல்ல முடியாத அவலம்….

குன்னூர் கரன்சி பகுதியை சேர்ந்த பெண் கவுசல்யா வயநாட்டில் பலி