காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் காந்தி நகர் காயிதே மில்லத் தெரு சாலையின் குறுக்கே கழிவுநீர் கால்வாய் குழாய் இணைப்பு கடந்த மார்ச் மாதம் உடைப்பு ஏற்பட்டு பள்ளத்தை ஏற்படுத்தியது. இதில் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த வழியாக ஜல்லி லோடு ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி ஒன்று இந்த பள்ளம் இருப்பது தெரியாமல் வந்து பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வெகுநேர போராட்டத்திற்கு பிறகே இந்த லாரி மீட்கப்பட்டது.
இதையடுத்து எந்தவித பெரிய வாகனங்களும் உள்ளே வர முடியாத அவல நிலை ஏற்பட்டது. மேலும் உடைப்பை சீரமைக்க இதுவரை நடுவீரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஓட்டு கேட்க வரும்போது மட்டும் அது செய்கிறேன். இதுசெய்கிறேன் என்று வாயிலேயே வடை சுட்டுவிட்டு செல்கின்றனர் என்று மக்கள் புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்திலும் பலமுறை மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் காந்தி நகர் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த காஜரா (வயது 55) என்ற பெண் கழிவறைக்குச் சென்று விட்டு வரும்போது செப்டிக் டேங்க் உடைந்து உள்ளே கால் மாட்டிக் கொண்டது. அப்போது கீழே விழுந்த அவரது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. அவரது உறவினர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
அவசர அவசரமாக வந்த 108 ஆம்புலன்ஸ் முத்து மாரியம்மன் கோவில் தெரு நோக்கி வேகமாக வந்தது. அந்த ஆம்புலன்ஸ் காயிதே மில்லத் தெருவில் திரும்பு முடியாமல் திரும்பி வந்தது. இதையடுத்து காயமடைந்த பெண்ணை தூக்கிக் கொண்டு வந்துதான் ஆம்புலன்சில் ஏற்றிய அவலம் ஏற்பட்டது. இந்த கழிவுநீர் கால்வாய் குழாய் உடைப்பை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இனியும் தாமதம் ஆனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings