in

குன்னூர் அருகே தாயகம் திரும்பிய தமிழர்களின் ஆலோசனை கூட்டம்

நீலகிரி:

குன்னூர் அருகே  தாயகம் திரும்பிய தமிழர்களின்  ஆலோசனைக் கூட்டம் நடந்தது

நீலகிரி மாவட்டம்  குன்னூர்  சேலாஸ் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்வாதாரம்  மற்றும்  அவர்களின்  முன்னேற்றம்  குறித்த ஆலோசனை கூட்டம்  உலிக்கல்  பேரூராட்சி துணைத்தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில்  தம்பிராஜ், மதி வாகனம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

அரசு தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களின் குடியிருப்புகளை சீரமைத்து தருவதுடன்  அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  அரசு செய்து கொடுக்க வேண்டும்.

அரசு தேயிலை தோட்டத்தில்  பணிபுரியும் தொழிலாளர்களுக்கு  அவர்கள் குடியிருக்கும் வீட்டை சொந்தமாகி கொடுக்க வேண்டும்   மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள  தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தலா  மூன்று சென்ட் நிலம் வழங்கி வீடு கட்ட ரூபாய்  10 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் .

கூடலூர் பகுதியில் உள்ள  செக்ஸன் 17 நில விவகாரத்தை உடனடியாக  ஆய்வு செய்து அப்பகுதி விவசாயம் மேற்கொண்டு வரும் தாயகம் திரும்பிய தமிழர்களின் நலனில்  அக்கறை கொண்டு   அதற்கு ஏற்றார் போல் அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செங்குன்றம் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது

லஞ்சம்வாங்கிய துணை தாசில்தார் மருத்துவமனையிலிருந்து தப்பியோட்டம்