செங்குன்றம்
செங்குன்றம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் செங்குன்றம் அடுத்த எம்.என்.நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் வேன் ஒன்று வந்தது. அதை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தினர்.
அதில் 32 கிலோ கஞ்சா என்னும் போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரும்போது போலீஸிடம் பிடிபட்டது.
இந்த கஞ்சாவை கடத்தி வந்த ரவுடிகள் செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஆறு மணிகண்டன் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (23), சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) ஆகிய மூன்று பேரும் கஞ்சா கடத்துவதில் பயங்கர எக்ஸ்பர்ட் டாம் இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings