புதுடெல்லி:
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோரும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொளள் வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 நாட்கள் கழித்தே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொளள் வேண்டும். இந்தியாவிற்கும் வர வேண்டும். மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்தி 10 நாட்கள் ஆன பிறகுதான் இவர்கள் துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும் அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings