பாரிஸ்:
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் எல்நினோ தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக உலகில்அதிக வெப்பம் கடந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளது.
எல்நினோ தாக்கல் வலுவிழந்து வரும் நிலையில் இறுதியில் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். இதன் காரணமாக அதிக வறட்சி, தவறி பெய்யும் பருவ மழை, வெள்ளப்பெருக்கு போன்றவை நீடிக்கும்.
என்நினோ தாக்கம் காரணமாக கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் சர்வதேச வெப்பநிலை சராசரியாக புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியை விட உயர்ந்து 1.58 டிகிரிசெல்சியசாக பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings