ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி தலைமையிலான அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளது.
ஈரானின் அரச செய்தி நிறுவனமான ‘IRNA’ வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் பொறுப்பதிகாரி வரவேற்றுள்ளனர்.
நியூயோர்க் நோக்கி பயணிக்கும் வழியில் கட்டார் தலைநகர் தோஹாவிற்கும் சென்ற வெளிவிவகார அமைச்சர், அங்கு கட்டார் அரசின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து, பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதேவேளை, பொதுச் சபை அமர்வில் உரையாற்றுவதற்காக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் இன்று (22) நியூயோர்க் நகரை சென்றடைய உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஜனாதிபதி, உலகத் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings