அவரக்குறிச்சி:
தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜய் சமீபத்தில் தனது இயக்கத்தை கட்சியாக தொடங்கினார். அந்த கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டார். தற்போது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
அதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் தங்களது வாகனம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்,, ஏவிஎம் கார்னர் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சதீஷ் ஏற்பாட்டில் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் 500-க்கு பொதுமக்களுக்கு உணவு வழங்கியும் கொடியேற்று விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
அரவக்குறிச்சி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings