திருவனந்தபுரம்
கடந்த 2017ம் ஆண்டில் மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கு விசுவரூபம் எடுத்தது. இதுபோல் பல நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரியவந்ததால் இதுகுறித்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள அரசால் குழு அமைத்தது. அந்த குழு கடந்த வாரம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் மலையாள சினிமாவில் பணிபுரியும் பெண்கள் ஏராளமானோர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் 7 பேர் அடங்கிய சிறப்பு குழுவை கேரள அரசு அமைத்தது. இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
சித்திக் மீது வழக்குப்பதிவு
கேரள நடிகைகளான ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு, இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்திக்கின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இடவேலா பாபு நடிகையுடன் இருந்த வீடியோவும் வெளியாகியுள்ளது.
ராஜினாமா
இதில் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்கள் பெரும்பாலும் மலையாள நடிகர்கள் சங்கத்தை (அம்மா) சேர்ந்தவர்கள் என்பதால் இந்த சங்கத்தின் தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் ராஜினாமா செய்தனர்.
தமிழ் நடிகர்களும் சிக்குகிறார்கள்?
இதற்கிடையே தமிழ்நடிகர்கள் பக்கமும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிக்கும் பெரும்பாலானவர்கள் மலையாள நடிகர்களாவர். இதில் சிக்கியவர் தமிழ் நடிகர் ரியாஸ் கான் ஒருவர் மட்டுமே.
ஆனால் ஹேமா கமிட்டி அறிக்கையில் சில தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் பெயரும் இடம்பெறும் என்று தெரிகிறது. இதனால் இந்த வழக்கு புயலை வீசத் தொடங்கியிருக்கிறது. யார் யார் சிக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings