மதுரவாயல்:
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவூர் ஊராட்சியில்
தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக் கிணங்க சுட்டெரிக்கும் கோடை வெயிலை பொதுமக்கள் எதிர்கொள்ளும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், நுங்கு, ஜூஸ் மற்றும் பழங்கள் வழங்கினார்.
இதில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.வந்தேமாதரம்,ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர், ஒன்றிய குழு உறுப்பினர் தா.அன்பழகன், வார்டு உறுப்பினர்கள் பழனி, வசந்தகுமார் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings