சென்னை:
விண்ணை சுற்றி வருவதுதான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம். விண்வெளியில் நாசாவுடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைந்துள்ள இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மையத்தில், விண்வெளி வீர்ர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இந்த விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இரவு 7.09 மணி முதல் 7 நிமிடங்கள் வானில் தெரியும் என்றும் நேற்று நாசா அறிவித்தது. அதன்படி இந்த விண்வெளி ஆய்வு மையத்தை நேற்று ஏராளமான மாணவர்கள் உள்பட பலர் கண்டுகளித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் பிற மாவட்ட மக்களும் வருகிற 14ம் தேதி வரை இந்த விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் காண முடியும் என்று நாச அறிவித்துள்ளது.
அதன்படி கோவை, உதகை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் பகுதி மக்கள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை கண்டுகளிக்கலாம். வருகிற 12ம் தேதி காலை 4.14 மணிக்கும், இரவு 7.07 மணிக்கும், 13ம் தேதி காலை 5 மணிக்கும், 14ம் தேதி காலை 4.14 மணிக்கும் விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings