நீலகிரி மாவட்டம்.###### குன்னூர்
COONOOR. Elephant. News
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானையும், காட்டு மாடும் தேயிலைத் தோட்டத்தில் நேருக்கு நேராக மோதியபோது காட்டு மாட்டிற்கு பயந்து காட்டு யானை ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில்,வைரலாகி வருகிறது…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைக் கூட்டங்கள் மலைப்பாதையில் உள்ள தனியா தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது. அவ்வாறு முகமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்கள் தேயிலை தோட்டத்தில் ஊடு பயிராக இருக்கக்கூடிய பலாமரங்களிலிருந்து, பலாப்பழங்களை சாப்பிடுவதும், சாலைகளில் உலா வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தேயிலைத் தோட்டத்தில் ஒற்றை காட்டு யானை உலா வந்த போது காட்டுமாடும்,காட்டு யானையும் நேருக்கு சண்டையிட முயன்றது. அப்போது நீண்ட நேரமாக ஒன்றை ஒன்று தாக்க முற்பட்டன. அப்போது காட்டு மாட்டிற்கு பயந்து காட்டு யானை ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில்,வைரலாகி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings