சென்னை:
சென்னை சோழிங்கநல்லூர் வட்டத்தில் உள்ளது பள்ளிக்கரணை. இங்கு சதுப்பு நிலக்காடுகள் உள்ளன. இங்குள்ள குப்பை கிடங்கில் நேற்று காட்டுத் தி ஏற்பட்டுள்ளது. கடுமையான வெயிலுக்கு இடையே ஏற்பட்ட இந்த காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதை உறுதி செய்வதோடு பொதுமக்களையும், சூழலியலையும் பாதுகாக்க துரித நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
சதுப்பு நிலப் பகுதிகளும், பறவைகளின் உறைவிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வரும் நிலையில், இக்காட்டுத்தீக்கான காரணிகளை கண்டறிய வலியுறுத்துகிறேன். குப்பை மேட்டின் தன்மை போன்ற மானுடவியல் காரணிகாள இருப்பின் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்கப்போதும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று பொதுமக்கள் உற்று நோக்க வேண்டுகிறேன்.
பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் மற்றும் அருகாமையில் இருக்கக் கூடிய குப்பைக்கிடங்கிலிருந்து வெளியேறும் வேதிமப்பொருட்கள் ஆகியவற்றால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி எச்சரிக்கை விடுத்து வந்தநிலையில் தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இழந்த சதுப்புநிலப் பகுதிகளை மீட்டுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் இனியாவது காலம் கடத்தாமலும், ஊழலின்றியும் அரசு ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings