in

பணிநிறைவு பெற இருந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை திடீர் சஸ்பெண்ட்

சென்னை:

பிரபல ரவுடிகளை என்கவுண்டர் மூலம் வீழ்த்திய வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் விசாரணையில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை என்கவுண்டர் ஸ்பெஷலிட் என்று தமிழ்நாடு காவல்துறையால் அறியப்பட்டவர். இவரது பெயரை கேட்டால் ரவுடிகள் ஆட்டம் காண்பார்கள்.

கடந்த 2003ம் ஆண்டு பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தார். இது அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

அதனை தொடர்ந்து கடந்த 2004ம் ஆண்டு யாருமே நெருங்கக்கூட முடியாத சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் சிறபபு அதிரடிப்படையிலும் அங்கம் வகித்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு மதுதுபாண்டியர் குருபூஜையின்போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் இருவர் வெள்ளத்துரையின் தலைமையிலான தனிப்படையினர் என்கவுண்டர் செய்தனர்.

மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரது 25 வருட காவல்பணியில் 12 என்கவுன்ட்டர்கள் நடத்தியுள்ளார். வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர் வெள்ளத்துரை.

தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பியாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தியில்  ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் தமிழக உள்துறையால் வெள்ளத்துரை  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மோடி தியானத்தை ஒளிபரப்பினால் புகார்: மம்தா எச்சரிக்கை

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காட்டுத்தீ… சீமான் காட்டமும்… கோரிக்கையும்…