in

அருணாச்சல முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்பு

இட்டாநகர்:

அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு 3வது முறையாக இன்று பதவி ஏற்றார். துணை முதல்வராக சன்ஜா மியன் பதவி ஏற்றுக்கொண்டார்.

அருணாசல பிரதேசத்தில் மக்களவையும் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. முதல்வர் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானார்கள்.

மீதம் உள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்ட நிலையில் 36 தொகுதிகளில் வென்றது. ஏற்கனவே போட்டியின்றி தேர்வான 10 இடங்களையும் சேர்த்து பாஜகவின் பலம் 46 ஆனது.

தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 5 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 3 இடங்களையும், அருணாசல் மக்கள் கட்சி 2 இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றது.

இதையடுத்து போஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பெமா காண்டு மீண்டும் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஆளுனர் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்கத் சந்தித்த பெமா காண்ட ஆட்சியமைக்க உரிமைகோரினார்.

இதையடுத்து பாஜக தொடர்ந்து 3வது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில் பெமா காண்டு இன்று முறைப்படி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா உள்பட தலைவர்கள் முன்னிலையில்  பெமாகாண்டுக்கு ஆளுனர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து துணை முதல்வர் சன்ஜா மியன் மற்றும் அனைவரும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

நீட் தேர்வு கருணை மதிப்பெண் ரத்து- மீண்டும்1,563 பேருக்கு தேர்வு

தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்து இயக்க தடை