ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மேல்மிட்டாளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன் (வயது70). இவருடைய நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவனப்பயிர் பயிரிட்டு உள்ளார்.
இன்று மாலை ராமச்சந்திரன் மகன் சுபாஷ் (45) தீவனப்பயிர்கள் அறுவடை செய்து கொண்டிருந்தார்.
அப்போது பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து கூச்சலிட்டு உள்ளார். அக்கம்பக்கம் உள்ள விவசாய தொழிலாளர்கள் மலைப்பாம்பை கண்டு கூச்சலிட்டு உள்ளனர். உடனடியாக ஆம்பூர் வனச்சரகர் பாபுவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த வனக்காப்பாளர்கள் ராஜ்குமார், கோகுல் ஆகியோர் தீவனப்பயிரில் இருந்த 9 அடி நீள மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பு துருகம் காப்பு காட்டில் விடப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings