in

உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

நீலகிரி:

தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்கிற நிம்மதியில் சிலரும்,  தோல்வியடைந்துவிட்டோமே என்கிற மனநிலையில் சிலரும் கோடை விடுமுறையை கழித்துவிட்டனர். இன்று தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்  புத்துணர்வுடன் கடந்தமுறையைவிட இந்த முறை அதிக மாணவர் சேர்க்கை மற்றும் கடந்த ஆண்டைவிட இந்த முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு பள்ளிக்கு வந்துள்ளனர்

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முதல் நாள் என்பதால் இன்று உற்சாகத்திற்கு பஞ்சம் இல்லாம் இருந்தது. அதேபோல் நீலகிரி மாவட்டம் உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல்நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் ஐயரின் ரெஜ், ஆசிரியர் பெருமக்கள், குன்னூர் சரகத்திற்க்கு உட்பட்ட குன்னூர் அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் கோமதி, குன்னூர் பெண் காவலர் நித்தியா, ஷீபா,தேவிகா ஆகியோர் அடங்கிய குழுவினர் மற்றும் பழைய மாணவ, மாணவிகள்  கலந்துகொண்டு புதிய  மாணவர்களை  வரவேற்றனர்

காவல்துறை ஆய்வாளர் கோமதி மற்றும் தலைமை ஆசிரியர், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் மாணவிகளை வாழ்த்தி இனிப்பு வழங்கி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல்

சூரிய புயலை படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம்