திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்னூர் பகுதியை சேர்ந்த வைகுண்டன் என்கிற ஊமைத்துரை மகன் சதீஷ். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரி ஒன்று உள்ளது. இவர் டிப்பர் லாரி மூலம் இரவு நேரத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகிறார்.
மேலும் அதிவேகமாக டிப்பர் லாரியை இயக்கி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் நடமாடி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும் சதீஷ் என்பவர் டிப்பர் லாரி மூலம் அதிக அளவில் மணல் ஏற்றிக்கொண்டு தமிழக அரசு சார்பில் புதிதாக போடப்பட்டுள்ள தார்சாலை வழியாக வருவதால் அச்சாலை குண்டும் குழியமாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சதீஷ், அவரது டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த போது சின்னூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மணல் லோடோடு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவம் நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி காவல் உதவி ஆய்வாளர் அஜித்குமார், கவிழ்ந்த டிப்பர் லாரியை போக்குவரத்திற்கு இடையூறின்றி வாகனங்கள் செல்ல ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பல மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் டிப்பர் லாரியை மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
மேலும் இதன் தொடர்பாக வழக்குஙப பதிவு செய்து அனுமதியின்றி மனல் ஏற்றி வந்து விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings