கொல்கத்தா:
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று வருகை தந்து தியானம் மேற்கொள்ள உள்ளார். இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாலும், இன்னும் இறுதிக்கட்ட தேர்தல் முடிவடையாத நிலையிலும் பிரதமர் நரேந்திர மோடி விவேகானந்தர் மண்டபத்தல் தியானம் மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இதுகுறித்து தெரிவிக்கையில், தியானம் என்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தியானம் செய்யும்போது யாராவது விதவிதமாக போட்டோ எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மக்களவை தேர்தல் முடிவு வெளியாவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை தியானம் என்ற பெயரில் குளிர்சாதனை அறையில் சென்று உட்காருகிறார், மோடியின் இந்த செயல் குறித்து எந்தக் கட்சியும் வாய் திறக்காதது ஏன்? மோடியின் தியானத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும். இதனை ஒளிபரப்பு செய்தால் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்று மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings