குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் 3 கரடிகளால் பொது மக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் (30.05.2024) குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகேயுள்ள ஓட்டுப்பட்டரை பகுதியில் அதிகாலை 4ணிக்கு வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு உலா வந்த 3 கரடிகளின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே குன்னூர் உலா வந்த ஒற்றை கரடிக்கு கூண்டு வைத்து சிக்காத நிலையில் தற்போது 3 கரடி உலா வந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings