in

தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு முறைகள்: ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 106 தனியார் பள்ளிகளின் 301 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் முன்னிலையில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட 49 பள்ளிகளின் 258 வாகனங்களையும், வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரிய வளாகத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, தங்கள் பிள்ளைகள் அப்பள்ளியில் படிப்பதாகவும், அவர்களும் பேருந்தில் இருப்பதாகவும் டிரைவர்கள் நாள் தோறும் நினைவுபடுத்திக்கொண்டு வாகனங்கள் இயக்குவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். வாகனத்தை இயக்கும் பொழுது கைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தால் வாகன ஓட்டுநர்களுக்கும் உடன் பயணிப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.

ஆய்வின்போது வாகன ஓட்டுநர்களுக்கு கண் பார்வை குறித்து கேட்டறிந்து, சிலரை அழைத்து தொலை தூரத்தில் உள்ள போக்குவரத்து வாகனத்தில் உள்ள வாசகங்களை படிக்க சொன்னார்.

இதன் முக்கியத்துவத்தை கருதி அவ்வப்போது கண் பார்வை பரிசோதனை மேற்கொண்டு, பள்ளி நிர்வாகங்கள் உறுதிபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

வாகனங்களில் தற்செயலாக தீ விபத்து ஏற்படும் போது அதனை எப்படி கையாளுவது என்பதை அந்தந்த வாகன ஓட்டிகளுக்கு தீயணைக்கும் கருவிகள் உபயோகப்படுத்தும் முறையினை அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் நேரடி விளக்கத்துடன் கற்றுத்தர தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோன்று முதல் உதவி சிகிச்சை மேற்கொள்வது குறித்து 108 அவசரகால ஊர்தி பணியாளர் மூலம் வாகன ஓட்டுநர்களுக்கு எப்படி எந்தெந்த வழிகாட்டுதல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நேரடியாக வாகன ஓட்டிகளுக்கு விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை: தீர்வு எப்போது

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கரூர்பரணிபார்க் பள்ளிமாணவர்கள் சாதனை