in

குன்னூர் அருகே மண்சரிந்து 10அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி

  • நீலகிரி மாவட்டம்.                                           குன்னூர் 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தொடர் மழையால் மண் சரிந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிப்பர் லாரி – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் கனமழை காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, மலைப்பாதை மற்றும் சாலையோரங்களில்,மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் சிம்ஸ் பார்க் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்காக, சமவெளிப் பகுதியில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றி வரப்பட்ட டிப்பர் லாரி ஒன்று சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. லாரியை ஓட்டி வந்த ஊட்டியை சேர்ந்த ரவி (48) தடுப்பு சுவர் பக்கவாட்டின் ஓரத்தில் நிறுத்திருந்தார்.

அப்போது, மழையால் ஊறியிருந்த சாலையின் ஓரம் திடீரெனச் சரிந்தது.இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்கவாட்டில் இருந்த சுமார் 10 அடி ஆழப் பள்ளத்தில் தலைகீழாக உருண்டோடி விழுந்தது.லாரி நிறுத்தப்பட்டிருந்த,போது ஓட்டுநரோ அல்லது உதவியாளரோ வாகனத்திற்குள் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத்,தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல் குன்னூர் காவல்துறையினர், விபத்துக்குள்ளான,லாரியை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, இவ்விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளை விற்க முயன்றவர் கைது

முஸ்லிம் தாதி உதவியாளர்களின் ஆடை உரிமை: ரவூப் ஹக்கீம் கோரிக்கை