in

தங்கராஜ் ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

நீலகிரி மாவட்டம்
வெலிங்டன்!!!!!!

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான,விளையாட்டுப் போட்டிகளை ராணுவ பயிற்சி மைய்யத்தின்  டெப்டி கமாண்டன்ட் கர்னல் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். நிறைவு விழாவில் இராணுவ பயிற்சி மய்யத்தின் கமாண்டர் பிரிகேடியர் கிறிஸ் நேந்து தாஸ் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்‌.
 
இந்திய கால்பந்து வரலாற்றின் மிக சிறந்த கோல்கிப்பராக கருதப்படும் பீட்டர் தங்கராஜ் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்ட்டர் படை பிரிவில் ஹவில்தாராக பணியாற்றிய இவர்,இந்திய ராணுவத்தின் மூலம் தனது விளையாட்டு வாழ்க்கையை துவக்கினார்.

அவரது நினைவை போற்றும் வகையில்  நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில ராணுவ பயிற்சி கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு தங்கராஜ் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பீட்டர் தங்கராஜ் நினைவு நாளை முன்னிட்டு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி தங்கராஜ் ஸ்டேடியத்தில் மாவட்ட அளவிலான அரசு பள்ளி மாணவிகள் மற்றும் மாணவர்களிடையே,விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளை முதலில் ராணுவ பயிற்சி மய்யத்தின் டெப்ட்டி கமான்டன்ட் கர்னல் பிரதீப் குமார் துவக்கி வைத்தார்.இதில் மாவட்டத்தில் உள்ள 18 அரசு பள்ளிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்‌.
10 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே,100 மீட்டர்,200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டபந்தயங்களும்,குண்டு எறிதல்,ஈட்டி எறிதல்,நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  இராணுவ பயிற்சி மைய்யத்தின் கமான்டன்ட் பிரிகேடியர் கிறிஸ் நேந்து தாஸ்,அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வெலிங்டன் கண்டோன் மென்ட்,பள்ளி வென்றது,மேலும் ஆண்கள் பள்ளியில் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி,பெண்கள் பிரிவில் புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளி (ஹேண்ஸ் கான்வென்ட்) வெற்றி பெற்றது இவர்களுக்கு
வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தின் பிரிகேடியர் கிறிஸ் நேந்து தாஸ் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

உதகையில் பொறுப்பான சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.