நீலகிரி மாவட்டம்!!!!!!
உதகையில் பொறுப்பான சுற்றுலா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
சுற்றுலா துறை, நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் RC Maatram இணைந்து நடத்திய பொறுப்பான சுற்றுலா விழிப்புணர்வு பேரணி தமிழ்நாடு ஹோட்டல்- ஊட்டி அரசு தாவரவியல் வரை சிறப்பாக நிறைவடைந்தது.
திரு. சங்கர் அவர்கள், மாவட்ட சுற்றுலா அலுவலர், இந்த பேரணியில் கலந்து கொண்டார்
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக NDSLF தலைவர் திரு.சக்தி சுரேஷ் ரமணா, துணைத்தலைவர்.திரு.ஜார்ஜ் பிரிட்டோ மற்றும் துணைத்தலைவர். திரு.ரஞ்சித் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அரசு தாவரவியல் பூங்காவில் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கையைப் பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, குப்பைகளைத் தவிர்ப்பது மற்றும் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் & கம்யூனிட்டி சர்வீஸ் டைரக்டர் ஜாஃபர் மற்றும் பிரசிடென்ட் செரீனா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings