in

வெலிங்டன் கண்டோன்மெண்ட் பாளைய வாரியம் சார்பில் தூய்மை போட்டி

நீலகிரி மாவட்டம்.                                          வெலிங்டன் 

வெலிங்டன் கண்டோன்மெண்ட் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான தூய்மைக்கான போட்டி

மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் நாடு முழுவதும்  பல்வேறு தூய்மை பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில் Swachhata hi seva எனப்படும் தூய்மையே சேவை இயக்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான,தூய்மை போட்டிகள் நடைபெற்றது. தூய்மை சேவையை ஊக்குவித்து சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து மாணவர்களிடையே,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்தல், உங்களுடைய தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,நகர் பகுதிகளை தூய்மைப்படுத்துதல்,குப்பைகளை தரம் பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை பள்ளி வளாகத்தில் தடை விதித்தல், ஒருமுறை பயன்படுத்த கூடிய பேனாக்களை தவிர்த்தல், விழிப்புணர்வு பேரணி, கழிவுகளைக் கொண்டு இயற்கை உரம் தயாரித்தல் அவற்றை பள்ளி வாக்களில் பயன்படுத்ல்,மூலிகை செடிகளை வளர்த்தல் குடும்பத்தார் மற்றும் அருகாமையில் வசிப்பவர்களிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், துணிப்பை தயாரித்து விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசு வழங்கும் விழா குன்னூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் தாங்கள் மேற்கொண்ட தூய்மை பணிகளை விளக்கக் காட்சி அளித்தனர்.சிறப்பு நடுவர் குழு இந்த விளக் காட்சிகளை ஆய்வு செய்து சிறப்பாக தூய்மை சேவை மேற்கொண்ட தேர்வு செய்தனர். இதில் கன்டோன்மென்ட் பள்ளி முதலிடம் பிடித்தது.மெட்ராஸ் ரெஜிமென்ட் இன் கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணேந்து தாஸ்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றி வெற்றி பெற்றவர்ளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை,வழங்கினார். இந்த போட்டியில் குன்னூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 8 பள்ளிகள் கலந்து கொண்டன மற்றும் இந்த நிகழ்ச்சியை கண்டோன்மெண்ட் சார்பில் ஒருங்கிணைப்பு செய்யபட்டு இருந்தது மற்றும் இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் நிர்வாக முதன்மை அதிகாரி டிக்குனி சிந்தியா, முதன்மை பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி,பூரணி, மற்றும் அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

குன்னூர் கரிமரா ஹட்டி பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்.

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் யோகாதின நிகழ்ச்சி நடைபெற்றது