நீலகிரி மாவட்டம். குன்னூர்
தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து குன்னுரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்ட குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும் குன்னூர் நகர மன்ற தலைவர் சுசீலா, துணைத்தலைவர் ப.மு.வாசீம் ராஜா,தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவை பரிமாறினார்கள்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் கோளிவாக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணோலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்
இதைத்தொடர்ந்து குன்னூர் நகராட்சி சார்பில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சிகள் குன்னூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட குழு உறுப்பினர் ராமசாமி,நகர மன்ற துணைத் தலைவர் வாசீம் ராஜா மற்றும் நகர மன்ற தலைவர் சுசிலா,நகர மன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவாக இட்லி,பொங்கல்,கேசரி,வடை,சாம்பார், சட்னி,உள்ளிட்ட உணவுகள் காலை உணவாக வழங்கப்பட்டது மொத்தம் 179 பேருக்கு இந்த உணவு வழங்கப்பட்டது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings