in

தனியார் தோட்டத்தில் பாறைக்கு வைக்கப்பட்ட வெடிபொருள் அகற்றம்.

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

#.நீலகிரி மாவட்டம்.                                                

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கெந்தளா பகுதியில் கடந்த 13 ஆம் தேதி தனியார் தேயிலை தோட்டத்தில் கிணறு தோண்ட பாறைக்கு வெடி வைக்க பயன்படுத்திய

மூன்று ஜெலட்டின் குச்சிகளை எடுக்காமல் விட்டுச் சென்றனர் .வெடிகுண்டு நிபுணர்கள் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்து செயல் இழக்க செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேலாஸ் கெந்தளா பகுதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தனியார் தேயிலை தோட்டத்தில் கிணறு தோண்டி வந்துள்ளனர்.                      

கிணற்றின் உள்பகுதியில் பாறை இருந்ததால் கடந்த 13 ஆம் தேதி கிணறு தோண்டும் தொழிலாளியான கோத்தகிரி குண்டடா பிரிவை சேர்ந்த சுந்தர் என்பவர் பாறையை வெடிவைத்து தகர்க்க ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தினர் அதில் ஒன்றை வெடிக்க செய்த போது அருகில் இருந்த குடியிருப்புகளில் அதிர்வு காணப்பட்டதால் குடியிருப்பு வாசிகள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தனர்.      

இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பெயரில் கொலக்கம்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தோட்ட உரிமையாளரான சுரேஷை மற்றும்  செய்து வெடிமருந்து பயன்படுத்திய குண்டடா பிரிவை சேர்ந்த சுந்தரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கிணற்றினுள் மூன்று ஜெலட்டின் குச்சிகள் இருப்பதாக சுந்தர் அளித்த தகவலின் பெயரில் கொலக்கம்பை காவல்துறையினர் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்து செயல் இழக்க கோவையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து பலத்த பாதுகாப்புடன் வெடிக்கச் செய்து செயல் இழக்க செய்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.                                            

நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்.A.ஜான்டிசோசா(டானியல்) 8870917777

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by A.JOHN DESUZA

Chief Reporter in Ullatchi Murasu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு: வானிலை

அமைச்சரவையில் “மாற்றம் இருக்கும்… ஏமாற்றம் இருக்காது” முதல்வர்