in

வேளாங்கண்ணி போராயத்தில் நாளை பெரிய தேர் பவனி

நாகை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியா நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வேளாங்கண்ணி நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பெயர் தேர் பவனி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முன்னதாக மாலை 5.15 மணிக்கு செம்மாலை மாதா மன்றாட்டு நவநாள் செபம் செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தேரை புனிதம் செய்து பெரிய தேர் பவனியை தொடங்கி வைக்கிறார்.

இதனை தொடர்ந்து மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடக்கிறது. வருகிற 8ம் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 5 மணிக்கு திருக்குடி திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சர்ச்சை சொற்பொழிவாளருடன் புகைப்படம்: அமைச்சர் காட்டம்

கீழக்கரை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு