சென்னை
சென்னை அசோக் நகர் பள்ளியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு, பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பள்ளியின் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டனம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் சொற்பொழிவாளர் மகா விஷ்ணு இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வெளியானது.
இதுபற்றி விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீங்க இந்த போட்டோவை வைத்துக்கொண்டு கேள்வி எழுப்புகிறீர்கள். ஒரு நாளைக்கு நான் 100 பார்வையாளர்களை பார்க்கிறேன். எதுக்காக வருகிறார்கள்… எதுக்காக போட்டோ எடுக்குறார்கள் என்று தெரியாது. போட்டோ எடுக்க அனுமதி கொடுக்க வேண்டும் எனற்ல் அது மிகமிக தவறான செய்தி. திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம். அதனால் இதையும் அதையும் சேர்த்து முடிச்சுப்போட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings