நீலகிரி மாவட்டம்: பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சுத் துறை சார்பாக பிரெஞ்சு தேசிய தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவரிடையே நடனப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சுழற்காற்று என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் குன்னூர்,உதகை, கோத்தகிரியைச் சேர்ந்த 18 பள்ளிகள் கலந்து கொண்டன.
ஒட்டு மொத்த கோப்பையை Holy Innocents பள்ளியும் இரண்டாம் இடத்தை Holy Angels பள்ளியும் St Joseph’s Convent பள்ளி மூன்றாம் இடத்தை தட்டிச் சென்றன.
சிறப்பு விருந்தினராக ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளி பிரெஞ்சு ஆசிரியர் திரு.தமிழ்மணி கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தார்.நடனமும் சந்தோஷம் பிரிக்க முடியாதவை என எடுத்துரைத்தார்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் பேசுகையில் நடனம் ஆவி ஆத்மா சரிரத்தின் ஒருங்கிணைப்பு என் எடுத்துரைத்தார்.
போட்டி நடுவர்களாக ஆல்வின் நடனக் கலைஞர் ஏ.டி.எஸ் நடனப் பள்ளி,ஆகாஷ் டாட் 7 நடனப்பள்ளிஆகியோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஷீலாஅவர்களும்,செயலர் அருட்சகோதரி அல்போன்சா அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களைக் கௌரவித்தனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings