நீலகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாதாந்தி செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் தலைவர் ஆர்.வாசுதேவன். தலைமையிலும், துணைத் தலைவர்கள் சி.செல்வராஜ், ஆர்.ஜெயந்தி, பொருளாளர் டி.மரியம்மா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில். செயலாளர் எஸ்.எம்.முகமது சலீம், சங்கத்தின் கடந்த மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1. கோத்தகிரி தினசரி சந்தை மேல் நுழைவாயில் பகுதி முதல் பழைய நூலகம் வரையுள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.
2.கோத்தகிரியில் மாதத்தின் முதல் தேதி மின்சார பராமரிப்பு செய்யாமல் மற்ற நாட்களில் மின்சார பராமரிப்பு செய்ய வேண்டும்.
3. கோத்தகிரி பகுதியில் தொடர் மழை காரணமாக மழைநீர் செல்லும் பாதையில் உள்ள மோரிகளில் தேங்கியுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.
4.பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பருப்பு மற்றும் பாமாயில் கோத்தகிரி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் முதல் வாரத்திலேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இணை செயலாளர் ஏ.வினோபா பாப், கூடுதல் செயலாளர் கே.எம். பீட்டர் , மக்கள் தொடர்பு அலுவலர்கள் பி.கிரேஸிசார்லஸ், முகமது இஸ்மாயில், செயற்குழு உறுப்பினர்கள் இ.எம்.திரைசா, எஸ்.லலிதாசிவன், எஸ்.விக்டோரியா, பி.விபின் குமார், எஸ்.சுரேஷ் மற்றும் உறுப்பினர்கள் ஒய்.தமிழ் செல்வி, எஸ்.சங்கீதா, எம்.ஏசுராணி, பி.பியூலாபபெஞ்மின, ஏ.சதீஷ், எஸ்.கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இணை செயலாளர் ஏ.வினோபா பாப் நன்றி கூறினார்.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings