in

2027 ஹஜ்: இலங்கை ஹாஜிகளுக்கான சேவைகள் குறித்து முகவர்களுக்கு விள

                        (  ஏ.எஸ்.எம்.ஜாவித் )

இலங்கை ஹாஜிகளுக்கு 2027 ஆம் ஆண்டின் ஹஜ்ஜில் வழங்கப்பட இருக்கும் சேவைகள் தொடர்பாக இலங்கை ஹாஜிகளுக்கு சேவைகள் வழங்க தெரிவு செய்யப்பட்ட கொலிடே இன் பக்கா நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக இலங்கை ஹஜ் முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு ஒன்று நேற்று (15) கொழும்பு (ITC) ஐ.ரி.சி ஹோட்டலில் ரத்தணதீப மண்டபத்தில் ஹஜ் குழு தலைவர் றியாஸ் மிஹ்லார் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த கொலிடே இன் பக்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ராபி நாதிரா, ஒப்பரேசன் மனேஜர் தாரிக் சியாத், அபிவிருத்தி முகாமையாளர் அத்னான், றிப்பாகான் அல்பஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மக்காவில் மினா மற்றும் அறபாவில் ஹாஜிகளுக்கு தங்குமிட வசதிகள், உணவு, கழிவறை சேவைகள் உள்ளிட்ட ஏனைய சேவைகள் வழங்குவது தொடர்பாக பூரண விளக்கம் ஒன்றை கொலிடே இன் பக்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ராபி நாதிரா வழங்கினார் அத்துடன் முகவர் நிறுவன உரிமையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்தார்.

அஸ்மி ரவல்ஸ் உரிமையாளர் அஸ்மியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் சமய கலாசார பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், ஹஜ் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஹஜ் முகவர்கவர் நிறுவனங்களின் உரிமைமயாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இம்முறை இலங்கை ஹாஜிகளுக்கு சோன் (Zone-2) இரண்டில்தான் தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட இருப்பதாகவும், கடந்த வருடங்களை விட இம்முறை சிறப்பான சேவைகளை வழங்க இருப்பதாகவும், மினாவில் ஹாஜிகளுக்கு மூன்று வேளையும் உணவுகளை ஹாஜிகளின் நலன் கருதி பார்சல்களாக வழங்க இருப்பதாகவும், அரபாவில் பொபே உணவு ஏற்பாடுகளும் செய்திருப்பதாக ஹஜ் குழுத் தலைவர் தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மன்னார் பொது மருத்துவமனையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அட

பலகத்துறை தாருஸ்ஸலாம் அகடமியின் 10ஆவது ஆண்டு விழா சிறப்பு நிகழ்வ