in

நாமல் ராஜபக்ச இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் கடந்த 04ஆம் திகதி ஆஜரானதைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் ரக விமானங்களை கொள்வனவு செய்த நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச் சலவை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சியோலில் LAWASIA மாநாட்டையொட்டி சிங்கப்பூர் சட்டச் சங்கத்துடன் இ

போராட்டம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில்